Posts

Showing posts from September, 2018

பொன்னியின் செல்வன்

ஆசிரியர் குறிப்பு: கல்கி கிருஷ்ணமூர்த்தி ராமசாமி ஐயர் கிருஷ்ணமூர்த்தி என்பதே இவரது இயற்பெயராகும். கல்கி என்பது விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் இருந்து தன் பெயரை மாற்றம் செய்து கொண்டார். இவரது காலம் 1899-1954. இவர் ஒரு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். இவர் 120 சிறுகதைகளையும், ஐந்து புதினங்களையும், மூன்று வரலாற்று காதல் காவியங்களையும் இயற்றியுள்ளார். கல்கி அவர்கள் மூன்று முறை சிங்கள தீவுகளுக்கு சென்று இக்கதையின் அமைப்புகளை எழுதியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் இக்கதைகளை முடிக்க காலமாயிற்று. இக்கதை 1951-1954 கல்கி நாள் இதழில் வெளிவந்தது. பின் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்றதால் இதன் ஆசிரியர் இக்கதையினை புதினமாக வெளியிட்டார். அன்று முதல் இன்றுவரை அனைவரையும் ஈர்த்து வருகிறது இக்கதை. கதையின் களம்: "கடலைச் சுருக்கி கட்டுரையாக்க முடியாது, இருப்பினும் இது என் சிறு முயற்சியே". பொன்னியின் செல்வன், பொன்னி இச்சொல் காவேரி நதியினை குறிக்கிறது. ஒவ்வொரு நாகரிகமும் ஒரு நதிக்கரையில் பிறக்கிறது."தஞ்சை மாநகரின் நாகரிகமும் சோழநாட்டின் பண்பாடும் பிறந்த நத...

பெருவுடையார் கோயில்

"தென் திசை மேரு நீழல் சாயா கோபுரம் பிரகதீஸ்வரம் ராஜ ராஜேஸ்வரம்" என்றும் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலின் உண்மையான பெயர் "தஞ்சைப் பெருவுடையார் கோயில்" ஆகும். ராஜராஜ சோழனுக்கு பின் அதாவது பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தஞ்சை மாநகர் மாராட்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. மாராட்டிய மன்னர்கள் இட்ட பெயரே பிரகதீஸ்வரர் கோயில் ஆகும். பிரகதீஸ்வரர் என்ற பெயர் சமஸ்கிருத மொழியில் இருந்து தழுவ பட்டதாகும். பிரகா என்னும் சொல்லின் பொருள் பெரிய, ஈஸ்வர் என்னும் சொல்லின் பொருள் சிவனாகும்.ஒவ்வொரு நாட்டு மன்னர்களும் தன் காலத்திற்குப் பின் தான் பெயர் சொல்லும்படி ஒரு அடையாள சின்னத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். அத்தகைய நோக்கமோடு சோழனும் சாணக்கிய மன்னனை போரில் வென்ற பின் இக்கோயில் கட்டமைப்பை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பாகும். இக்கோயிலின் பல தொல்பொருள் அதிசயங்கள் அடுத்து வந்த படையெடுப்புகளில் அழிக்கப்பட்டுள்ளது.ஆயிரம் ஆண்டுகளாயினும் சிறிதளவு கூட அசையாமல் இன்றுவரை கட்டியவாறு இருப்பது இக்கோயிலின் பெருமை. லெனின் டவர் ஆப் பிசா இத்தாலியில் உள்ளத...