பெருவுடையார் கோயில்


"தென் திசை மேரு
நீழல் சாயா கோபுரம்
பிரகதீஸ்வரம்
ராஜ ராஜேஸ்வரம்"
என்றும் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலின் உண்மையான பெயர் "தஞ்சைப் பெருவுடையார் கோயில்" ஆகும். ராஜராஜ சோழனுக்கு பின் அதாவது பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தஞ்சை மாநகர் மாராட்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. மாராட்டிய மன்னர்கள் இட்ட பெயரே பிரகதீஸ்வரர் கோயில் ஆகும். பிரகதீஸ்வரர் என்ற பெயர் சமஸ்கிருத மொழியில் இருந்து தழுவ பட்டதாகும். பிரகா என்னும் சொல்லின் பொருள் பெரிய, ஈஸ்வர் என்னும் சொல்லின் பொருள் சிவனாகும்.ஒவ்வொரு நாட்டு மன்னர்களும் தன் காலத்திற்குப் பின் தான் பெயர் சொல்லும்படி ஒரு அடையாள சின்னத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். அத்தகைய நோக்கமோடு சோழனும் சாணக்கிய மன்னனை போரில் வென்ற பின் இக்கோயில் கட்டமைப்பை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பாகும். இக்கோயிலின் பல தொல்பொருள் அதிசயங்கள் அடுத்து வந்த படையெடுப்புகளில் அழிக்கப்பட்டுள்ளது.ஆயிரம் ஆண்டுகளாயினும் சிறிதளவு கூட அசையாமல் இன்றுவரை கட்டியவாறு இருப்பது இக்கோயிலின் பெருமை. லெனின் டவர் ஆப் பிசா இத்தாலியில் உள்ளது மற்றும் பிக் பென் லண்டனில் உள்ளது இவையெல்லாம் உலக அதிசயங்கள் என்னும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இன்றைய காலத்தில் இவ்விரண்டு அதிசயங்களும் சரிந்து வரும் நிலையில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் இன்றுவரை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் ஆறு நிலநடுக்கங்கள் பின்னும் சிறிதும் அசையாமல் இருப்பது வியப்புக்குரியது.பாரம்பரியத்தின் அடையாளச் சின்னமாகவும், இந்திய நாட்டின் பெருமையாகவும், தஞ்சை மாநகரின் கம்பீரமாகவும்,சோழனின் கலைத்திறனுக்கு அடையாளமாகவும் தஞ்சை பெருவுடையார் கோயில் திகழ்கிறது. இக்கோயில் கட்டமைப்பு ராஜராஜ சோழனின் தமிழ் பற்றுருக்கும் அவரின் கலைத்திறன் ஆர்வத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். கோயிலின் விமானம் சுமார் 80 டன் எடையைக் கொண்டது. கோபுரம் என்பது கோவிலின் கருவறைக்கு மேல் அமைக்கப்படுவது ஆகும்.
ராஜராஜ சோழன் தமிழ் பற்றை உணர்த்தும் வகையில் இக்கோயிலில் சிவலிங்கத்தை 12 அடி உயரத்தில் அமைத்துள்ளார், தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களை உணர்த்தும் வகையில் அமைத்துள்ளார்.கோயில் லிங்க பீடத்தின் உயரம் 18 அடி கொண்டது, இது தமிழில் உள்ள மெய் எழுத்துக்களை உணர்த்துகின்றது. கோயிலின் கோபுரத்தின் உயரம் சுமார் 216 அடி உயரத்தை கொண்டது இவை தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களை உணர்த்துகின்றன. இவை அனைத்தும் இராஜராஜ சோழனின் தமிழ் பற்றினை உலகத்திற்கு பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இராஜராஜ சோழன் கலை சாம்ராஜ்யத்தின் தலைவன் என்பதை இக்கோயில் கட்டமைப்பால் உணரலாம்.ராஜராஜ சோழன் தன் கலைத்திறனை கட்டி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழ் மீது கொண்ட காதலாலும் சிவன் மீது கொண்டுள்ள பற்றினாலும் இக்கோயில் கட்டமைப்பு முடிக்க 30 ஆண்டுகள் ஆயிற்று. ஆயிரம் எதிர்ப்புகளுக்கு பின் தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராஜராஜனால் நிறைவு செய்யப்பட்டது. கலைச் சாம்ராஜ்யத்தின் சின்னமாகவும் இக்கோயில் திகழ்கிறது. உலக அதிசயப்பட்டியலில் இடம்பெற அனைத்து தகுதிகளும் இக்கோவிலுக்கு உண்டு, இருப்பினும் தாஜ்மஹால் உலக அதிசயங்களில் இடம் பெற முயற்சித்த மக்கள் தஞ்சை பெருவுடையார் கோவிலை உலக அதிசயங்களுள் இடம்பெற முயற்சிக்கவில்லை. இக்கால கட்டமைப்பாளர்கள் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கட்டமைப்பை கண்டு வியந்து வருகின்றன. இக்கோயில் நிலத்தை தோண்டாமல் சமவெளியில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கோபுரம் தாமரை மலரின் அமைப்பைக் கொண்டது, கோபுர இடை 80 டன் ஆகும். ஐந்து ஆண்டுகள் இக்கோயில் கட்டமைப்புக்கு பின் கோபுரம் உயர்த்த 5000 யானைகளையும், குதிரைகளையும்,எருமைகளையும், மனிதர்களையும் பயன்படுத்தி கோபுரம் எழுப்பப்பட்டது. இக்கோயில் புவி ஈர்ப்பு சக்தி மையமாகக் கொண்டு கட்டப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி V வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அமைந்தமையால் இக்கோயிலின் கோபுரம் இன்றுவரை அசையாமல் நிற்கிறது. பெருவுடையார் கோயிலின் கோபுரத்தின் நிழல் தரையைத் தொடுவது இல்லை. கற்களை ஒன்றன் பின் ஒன்றாக அமைத்து இக்கோயிலின் கோபுரத்தை வலிமையாக அமைத்துள்ளனர் அக்கால கட்டமைப்பாளர்கள். கோயிலின் விமானம் ஒரு பாறையால் செதுக்கப்பட்டது.நந்தியும் ஒரு பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டமைப்பின் பொழுது உதவிய அனைத்து ஊழியர்களின் பெயர்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 400 ஆடல் அழகிகளின் பெயர்களும் அவர்களின் இருப்பிடம் போன்றவையும் 50 இசை கலைஞர்களின் பெயர்களும் 600 ஊழியர்களின் பெயர்களும் இக்கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கோவில் சிற்பங்களில் சீன மக்களின் உருவ அமைப்பு மற்றும் பிற நாட்டு மன்னர்களின் உருவ அமைப்பும் காணப்படுகிறது. இவை சோழ மன்னன் பிற நாட்டுடனும் நட்புறவு கொண்டுள்ளான் என்பதன் அடையாளமாகும். இக்கோயிலில் ராஜராஜ சோழன் மற்றும் கருவூர்த்தேவர் ஓவியங்கள் அஜந்தா குகை ஓவியங்களுக்கு ஈடானவை. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிரானைட் கற்களை கொண்டும் இக்கோயில் புதிர் முறையை கொண்டும் கட்டப்பட்டது. தஞ்சையைச் சுற்றி 60 மைல் தொலைவிலும் கிரானைட் கற்கள் கண்டறியப்படவில்லை இருப்பினும் தஞ்சை பெருவுடையார் கோவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்டதாகும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிரானைட் கற்கள் இக்கோயிலின் கட்டமைப்புக்கு பயன்பட்டுள்ளது ஆனால் இவை எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.சிவன் ஒரு தமிழ்க் கடவுள் என்பதையும் தான் வாழும் காலத்திற்குப்பின் அடையாளத்தை இவ்வுலகத்திற்கு கூறும் வண்ணம் ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியுள்ளார். இராஜராஜ சோழன் தனது பெருமைகளையும் தான் செய்த அனைத்து சாதனைகளையும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார். இக்கோயிலின் உயரம் 200அடி ஆகும்.10 விமானங்களை கொண்டது எட்டு விமானம் வரை மக்களுக்கு அனுமதி உண்டு.
கோயிலின் சிற்பங்களும் கலை நுணுக்கங்களும் மக்களை பிரமிக்கும் வகையில் அமைத்துள்ளார் ராஜராஜசோழன். யுனெஸ்கோ பரிந்துரைக்கும் உலக மர்மங்களை கொண்ட கோயில்களில் இதுவும் ஒன்று. ராஜராஜ சோழன் தனது 67 வயதில் காலமானார் என்பது உண்மை, இருப்பினும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமே. சிங்களப் பெண் ஒருத்தி அவரை பிரகதீஸ்வரர் திருக்கோயிலின் எட்டாவது விமானத்திலிருந்து கீழ் தள்ளி விட்டாள் என்பது ஒரு குறிப்பு, மற்றொரு குறிப்பு அவர் இயற்கை மரணம் எய்தினார் என்பதாகும். ராஜராஜ சோழனின் மரணத்திற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. அவர் இறந்த பின் அவரது மகன் ராஜேந்திர சோழன் தஞ்சை மாநகரின் அரசனாக அவரின் அத்தை ராஜராஜ சோழனின் அக்கா குந்தவையால் முடிசூட்டப்பட்டார். ராஜேந்திர சோழனின் காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் மூடப்பட்டு உள்ளது அதற்கு காரணம் மக்கள் ராஜராஜ சோழனின் ஆத்மா கோயிலை சுற்றி வரும் என்ற நம்பிக்கை என்று கூறப்படுகிறது. ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் சோழநாட்டின் மற்றொரு தலைநகரமாகும். இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றொரு கோயிலை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு இணையாக கட்டியுள்ளார். உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் வகையில் இக்கோயில் அமைந்துள்ளது இருப்பினும் நம் நாட்டு மக்கள் இக்கோயிலின் மகிமையை பெரிதாக கருதுவதில்லை, இதுவே வருத்தத்திற்குரிய ஒன்றாகும். சோழ சாம்ராஜ்யத்தின் பெருமையை உணர்த்துவதே என் நோக்கம் ஆகும். உலகெங்கும் சுற்றித் திரியும் தமிழர்கள் ஏன் நம் நாட்டு அதிசயங்களை தேடி பார்ப்பதில்லை. பிற மக்கள் நம்மை கண்டு வியந்து போகும் அளவிற்கு உயர்ந்துள்ளோம் இருப்பினும் அதை போற்றிப் பாதுகாக்க நம் மக்கள் முயல்வதில்லை. நம் நாட்டுக் கலைக்களஞ்சியத்தை நமக்கு பின் வரும் சங்கதியர்கள் காண்பிக்க அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். "உயர்த்தி வாழ்வோம் நம் நாட்டின் பெருமைகளை, உயர்ந்து வாழ்வோம் பிற நாட்டு மக்கள் நம்மை கண்டு வியங்கும் வகையில்".

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பர்கள் இல்லம்

Reminiscence

பொன்னியின் செல்வன்