ஆசிரியர் குறிப்பு: கல்கி கிருஷ்ணமூர்த்தி ராமசாமி ஐயர் கிருஷ்ணமூர்த்தி என்பதே இவரது இயற்பெயராகும். கல்கி என்பது விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் இருந்து தன் பெயரை மாற்றம் செய்து கொண்டார். இவரது காலம் 1899-1954. இவர் ஒரு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். இவர் 120 சிறுகதைகளையும், ஐந்து புதினங்களையும், மூன்று வரலாற்று காதல் காவியங்களையும் இயற்றியுள்ளார். கல்கி அவர்கள் மூன்று முறை சிங்கள தீவுகளுக்கு சென்று இக்கதையின் அமைப்புகளை எழுதியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் இக்கதைகளை முடிக்க காலமாயிற்று. இக்கதை 1951-1954 கல்கி நாள் இதழில் வெளிவந்தது. பின் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்றதால் இதன் ஆசிரியர் இக்கதையினை புதினமாக வெளியிட்டார். அன்று முதல் இன்றுவரை அனைவரையும் ஈர்த்து வருகிறது இக்கதை. கதையின் களம்: "கடலைச் சுருக்கி கட்டுரையாக்க முடியாது, இருப்பினும் இது என் சிறு முயற்சியே". பொன்னியின் செல்வன், பொன்னி இச்சொல் காவேரி நதியினை குறிக்கிறது. ஒவ்வொரு நாகரிகமும் ஒரு நதிக்கரையில் பிறக்கிறது."தஞ்சை மாநகரின் நாகரிகமும் சோழநாட்டின் பண்பாடும் பிறந்த நத...
Comments
Post a Comment